முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது - மார்க் பவுச்சர்!
சில தனிப்பட்ட நபர்களின் எதிர்காலம் மற்றும் உடல் தகுதி குறித்து புரிந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் நேற்று குஜராத் அணியிடம் மும்பை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய குஜராத் அணியில் ஷுப்மன் கில் சதத்துடன் அதிரடியாக விளையாடி 233 ரன்கள் குவித்தது. மும்பை பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிக மிகச் சுமாராக இருந்தது. நேற்றைய போட்டியின் இடையில் காயம் பட்ட இஷான் கிஷான் விளையாட முடியாமல் போக, அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங்கும் கைக் கொடுக்கவில்லை.
பொதுவாக கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹித் சர்மாவின் பேட்டி ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராகவே இருக்கிறது. நேற்றைய போட்டியில் தோற்று ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய மும்பை இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் நீண்ட பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பல முக்கியமான விஷயங்களையும் பேசி இருக்கிறார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “பந்துவீச்சு வரிசையில் நீங்கள் உங்களின் முக்கியமான இரண்டு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களை இழக்கிறீர்கள். அது இரண்டு முக்கியமான ஓட்டைகளை அணியில் உருவாக்குகிறது. அதை முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முயற்சித்தோம். காயத்தில் இருக்கும் உங்கள் அணியின் தோழர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள் என்று நம்பலாம்.
ஒருவேளை அவர்கள் வருவதற்குத் தாமதமானால் பிறகு நாம் அந்த இடத்திற்கு வேறு ஏதாவது மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசிக்க வேண்டும். நான் இப்பொழுது புழுக்களின் டப்பாவை திறக்க விரும்பவில்லை. அது முட்டாள்தனமானது. உட்கார்ந்து கொஞ்சம் சிந்தித்து உணர்ச்சிகளை கைவிட்டு நல்ல கிரிக்கெட் முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் என்று நான் நினைக்கிறேன்.
சில தனிப்பட்ட நபர்களின் எதிர்காலம் மற்றும் உடல் தகுதி குறித்து புரிந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆமாம் 233 ரன்கள் என்பது கொஞ்சம் அதிகமானதுதான். நாங்கள் இருபது, முப்பது ரன்கள் சேர்த்துக் கொடுத்து விட்டோம். காயத்திற்கு பிறகு இஷான் கிஷான் விளையாடுவாரா இல்லையா என்பதில் எங்களுக்குக் குழப்பம் இருந்தது.
அவரது இடத்தில் வதேரா சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. பயிற்சி போட்டிகளில் அவர் துவக்க இடத்தில் களம் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். எனவே நேற்றைய இரவில் எங்களுக்கு அப்படி ஒருவர் சென்று விளையாட வேண்டியது தேவையாக இருந்ததால் அவரை அனுப்பி வைத்தோம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now