
16ஆவது ஐபிஎல் சீசனின் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி மற்றும் டூ பிளெசிஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தியது லக்னோ. அதற்கு காரணம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததுதான். முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறினர். அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், டூ பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர் ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதில் கேப்டன் டூ பிளெஸ்ஸி, 40 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார்.