-mdl.jpg)
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று நடைபெறும் 56ஆவது லீக் ஆட்டத்தில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்திவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை களமிறங்கினர். ஆனால் கேகேஆர் அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஏனெனில் ஆட்டத்தின் முதலிரண்டு ஓவர்களில் கேகேஆர் அணியின் பேட்டர்களை ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் சோதித்தனர்.