
ஐபிஎல் 16ஆவது சீசனின் 17ஆவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சென்னை அணியில் தீக்சனா மற்றும் ஆகாஷ் சிங் இருவரும் சான்ட்னர் மற்றும் தீபக் சஹார் இருவருக்கு பதிலாக இடம் பெற்றார்கள்.
ராஜஸ்தான் அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் துஷார் பந்துவீச்சில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து மூன்றாவது விக்கட்டுக்கு படிக்கல் அனுப்பப்பட்டார். அவர் 26 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த இரண்டு விக்கட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார்.
சஞ்சு சாம்சனுக்கு அடுத்து ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் களம் இறக்கப்பட்டார். இவர் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரை சதம் அடித்து 52 ரன்னில் ஆட்டம் இழந்தார்.