
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த 5 போட்டிகளில் விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து, நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. எனினும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது.
இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “அவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஒரு சில உபகரணங்கள் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 15 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் மணீஷ் பாண்டே மட்டுமே 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.