
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆர்சிபி தரப்பில் அபாரமாக பந்துவீசி வந்த சிராஜ், இஷான் கிசன்(10) விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை, தினேஷ் கார்த்திக் மீது மோதி கோட்டைவிட்டார். 2 கேட்ச் தவறவிட்டதன் மூலம் கிடைத்த வாய்ப்பை ரோஹித் சர்மா பயன்படுத்திக் கொள்ளவில்லை. 10 பந்துகளில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து, அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
கேமரூன் கிரீன் 5 ரன்கள், சூரியகுமார் யாதவ் 15 ரன்கள் அடித்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது மும்பை அணி. அப்போது உள்ளே வந்த திலக் வர்மா ஆரம்பம் முதலே ஒரு பக்கம் நின்றுகொண்டு அதிரடியாக விளையாடி, தனி ஆளாக போராடினார். திலக் வர்மாவுடன் நன்றாக பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த நேகல் வதேரா, 21 ரன்களுக்கு அவுட் ஆனார்.