Advertisement
Advertisement
Advertisement

தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன் - விராட் கோலி!

மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றிருக்கலாம். சிஎஸ்கே 4 முறை கோப்பை வென்றிருக்கலாம். அவர்களை தொடர்ந்து அதிகமுறை பிளே ஆஃப் சென்ற அணியாக ஆர்சிபிதான் இருக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். 

Advertisement
IPL 2023: We Hit Good Areas And Kept Putting Pressure On Bowlers, Says Kohli After RCB's Win
IPL 2023: We Hit Good Areas And Kept Putting Pressure On Bowlers, Says Kohli After RCB's Win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 03, 2023 • 12:38 PM

ஐபிஎல் 16ஆவது சீசனின் 5ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா 1, இஷான் கிஷன் 10, கேமரூன் கிரீன் 5 ஆகியோர் அடுத்தடுத்து படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவும் 15 அதிரடி காட்டவில்லை.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 03, 2023 • 12:38 PM

இதனைத் தொடர்ந்து திலக் வர்மா 84 (46), நேஹல் வதேரா 21 (13), அர்சத் கான் 15 (9) ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 171/7 ரன்களை குவித்தது. அதன் பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 82 (49), டூ பிளஸி 73 (43), கிளென் மேக்ஸ்வெல் 12 (3) ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதால், ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் 172/2 ரன்களை குவித்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

Trending

இப்போட்டி முடிந்தப் பிறகு விராட் கோலி பேட்டிகொடுத்தார். அதில், “இது நம்ப முடியாத வெற்றி. அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். நீண்ட காலத்திற்கு பிறகு சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வந்து வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுதான் களமிறங்கினோம்.

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்களை குவித்தது. பிட்ச் அப்போதே பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிட்டது. இதனால்தான், எங்களால் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட முடிந்தது. கரண் ஷர்மாவுக்கு கடந்த சீசனில் வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர் அப்போது பயிற்சி ஆட்டங்களில், ஒரு சிக்ஸர்களை கூட விட்டுக்கொடுக்காமல்தான் இருந்தார். தற்போதும் அதே பார்மில் இருந்ததால்தான், வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்றிருக்கலாம். சிஎஸ்கே 4 முறை கோப்பை வென்றிருக்கலாம். அவர்களை தொடர்ந்து அதிகமுறை பிளே ஆஃப் சென்ற அணியாக ஆர்சிபிதான் இருக்கிறது. இந்த வருடம் தொடர்ந்து அதேபோல் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement