
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்வதற்காக தீவிரம் காட்டி வருகிறது. இதில் கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் அணிக்கு திரும்பியதுன், அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளது அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.