ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராகணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி ஓவ்வொரு அணியும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்தாண்டு சில ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தடுமாறி வரும் கேகேஆர் அணியானது நடப்பு சீசனில் மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், கேகேஆர் அணி தொடக்க வீரராக பில் சால்ட் என்ற அதிரடி பேட்ஸ்மேனை பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆஃப்கானிஸ்தான் அதிரடி விக்கெட் கீப்பர் ரஹ்மத்துல்லா குர்பாஸை தொடக்க வீரராக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் குர்பாஸை தேர்வு செய்வதன் மூலம் அணிக்கான விக்கெட் கீப்பரும் கிடைத்துவிடுகிறார் என்று கூறியுள்ளார்.
மற்றொரு தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயரை களமிறக்கலாம். மூன்றாவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரையும், நான்காம் இடத்தில் நிதீஷ் ராணாவை தேர்வுசெய்துள்ள அவர் 5ஆவது இடத்தில் ரிங்கு சிங்கை தேர்வுசெய்துள்ளார். அதன்பின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸலை 6ஆம் இடத்திலும், சுனில் நரைனை 7ஆம் இடத்திற்கு தேர்வுசெய்துள்ளார். ஹர்ஷித் ராணா மற்றும் ஸ்டார்க், சேத்தன் சக்காரியா, மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்களை பந்துவீச்சாளராக பயன்படுத்தலாம் என்றும், சுயாஷ் ஷர்மாவை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று கேகேஆர் அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் நடப்பு சீசனில் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்ற கேகேஆர் அணி வற்புறுத்த வேண்டும். கேகேஆர் அணியில் இந்திய வீரர்களின் பேட்டிங் அதிகமாக இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக அமையும். இந்த பேட்டிங் ஆர்டரை வைத்துக்கொண்டு கேகேஆர் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு இம்முறை தகுதி பெற முடியும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
கேகேஆர் அணி: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பில் சால்ட், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, கேஎஸ் பாரத், சேத்தன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மணீஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்த சமீரா, சாகிப் ஹுசைன்.
Win Big, Make Your Cricket Tales Now