ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் தகர்க்கப்பட்ட சில சாதனைகளின் பட்டியல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வந்தாலும், இந்தாண்டு சீசனானது முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமான ஒரு தொடராகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரை, இந்த சீசனில் இதுவரை 6 முறை ஐபிஎல் அணிகள் கடந்துள்ளதே சாட்சி.
அந்தவகையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியும் பேட்டர்களுக்கு சாதகமான ஒரு போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், அதனை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த முதல் அணி எனும் வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
Trending
இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் தகர்க்கப்பட்ட மற்றும் படைக்கப்பட்ட சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பஞ்சாப் இந்த போட்டியில் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி 259 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை தற்போது பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.
அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்த அணிகள்
- பஞ்சாப் கிங்ஸ் - 262 ரன்கள் (கேகேஆர் அணிக்கு எதிராக)
- தென் ஆப்பிரிக்கா - 259 ரன்கள்(வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக)
- மிடில்செக்ஸ் - 253 ரன்கள்(சர்ரே அணிக்கு எதிராக)
- ஆஸ்திரேலியா - 244 ரன்கள்(நியூசிலாந்து அணிக்கு எதிராக)
- பல்கேரியா - 243 ரன்கள் (செர்பியா)
மேலும், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது போட்டியாக கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி சாதனை படைத்துள்ளது. முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 539 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த போட்டியில் 523 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியின் சாதனையை சமன் செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட போட்டி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 549 ரன்கள்
- கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் - 523 ரன்கள்*
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - 523 ரன்கள்
- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - 469 ரன்கள்
அதேபோல், ஐபிஎல் தொடரில் சேஸிங் செய்த மிக அதிகபட்ச இலக்காகவும் இது அமைந்துள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 224 ரன்களை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்த நிலையில், 262 ரன்களைச் சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
What A Game It Was! #IPL2024 #PBKS #KKRvPBKS #PunjabKings pic.twitter.com/zq1S7OewFd
— CRICKETNMORE (@cricketnmore) April 26, 2024
ஐபிஎல் தொடரில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு
- 262 ரன்கள் - பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2024*
- 224 ரன்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2024
- 224 ரன்கள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், 2020
- 219 ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், 2021
மேலும், ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டியாகவும் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், இந்த போட்டியில் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடிப்பட்ட போட்டிகள்
- பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2024)- 42 சிக்ஸர்கள்
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் (2024) - 38 சிக்ஸர்கள்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2024) - 38 சிக்ஸர்கள்
ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸின் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்
- பஞ்சாப் கிங்ஸ் - 24 சிக்ஸர்கள் (கேகேஆர் அணிக்கு எதிராக)
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 22 சிக்ஸர்கள் (ஆர்சிபி அணிக்கு எதிராக)
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 22 சிக்ஸர்கள் (டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக)
Win Big, Make Your Cricket Tales Now