Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மழை காரணகாம டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan May 13, 2024 • 22:57 PM
ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்! (Image Source: Google)

ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான போட்டியானது கடுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள இருந்தது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதற்கேற்றாவரே மழையுன் நின்ற நிலையில் மைதானத்தில் தன்மை குறித்து நடுவர்களும் பரிசோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி மைதான ஊழியர்களும் தண்ணிரை வடிக்கட்டும் முயற்சியில் இறங்கி இருந்தனர்.

Trending


ஆனால் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ள காரணத்தால் இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி அந்த அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளின் முடிவில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று 11 புள்ளிகளுடன் பட்டியலின் 8ஆம் இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் கேகேஅர் அணியானது 13 போட்டிகளில் 9 வெற்றி களைப் பதிவுசெய்து 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement