Advertisement

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் இணைந்துள்ளார்.

Advertisement
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 01, 2024 • 10:56 PM

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 01, 2024 • 10:56 PM

இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

Trending

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களது கேப்டன் மற்றும் துணைக்கேப்டனை அறிவித்தது. அதன்படி இந்திய வீரர் கேஎல் ராகுல் கேப்டனாகவும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூஸ்னரும் இடம்பிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே எஸ்ஏ20 லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அணிகளில் ஒன்றான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். 

அதன்படி. தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், உதவி பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், சுழற்பந்து வீச்சு ஆலோசகர் பிரவின் தாம்பே, பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் மற்றும் வியூக ஆலோசகர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோருடன் இணைந்து லான்ஸ் க்ளூஸ்னர் பணியாற்றவுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பிடித்திருந்தார். 

தென் ஆப்பிரிக்க அணிக்காக 1996 முதம் 2004ஆம் ஆண்டு வரை விளையாடிய லான்ஸ் க்ளூஸ்னர், 49 டெஸ்ட் மற்றும் 171 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,482 ரன்களையும், 272 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். தனது ஓய்வு பிறகு உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் இவர் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement