
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இப்போட்டியும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக தற்போது சிஎஸ்கே அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா, இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
முன்னதாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் மதீஷா பதிரனா இடம்பிடித்திருந்தார். அப்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரின்போது பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக பதிரானா குணமடையாததால், ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியானது.
Matheesha pathirana landed in Chennai!!#IPL2024 #ChennaiSuperKings #CSK #Yellove #Anbuden #MatheeshaPathirana pic.twitter.com/nhz6dAUTR6
— Jega8 (@imBK08) March 23, 2024