
காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிடும் மிட்செல் மார்ஷ்; உறுதிசெய்த சௌரவ் கங்குலி! (Image Source: Google)
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.
இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் ஒன்பதாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி நாளைய போட்டியையும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெறும் நோக்கில் விளையாடவுள்ளது.