
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்வதற்காக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்ய டெல்லி அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அணியின் முக்கிய வீரராக இருந்துவரும் லுங்கி இங்கிடி நடப்பு சீசனில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.