அறிமுக போட்டியில் அதிரடி காட்டிய சமீர் ரிஸ்வி -வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி சிக்ஸர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரில் அறிமுகமில்லாத வீரருக்கு சிஎஸ்கே அணி இவ்வளவு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததன் மூலம் சமீர் ரிஸ்வி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
அதன்படி நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ரிஸ்விக்கு அப்போட்டியில், பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சமீர் ரிஸ்வின் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசினார்.
Trending
இப்போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சில் தனது முதல் பந்தை சந்தித்த சமீர் ரிஸ்வி யாரும் எதிர்பாராத வகையில் ஸ்கெயர் லெக் திசையில் சிக்சர் விளாசி தனது வருகையை பதிவுசெய்தார். அத்துடன் அதே ஓவரில் மீண்டும் இறங்கி வந்து நேராக மற்றொரு சிக்சரையும் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இதன்மூலம் சமீர் ரிஸ்வி அதிரடியாக தனது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் சமீர் ரிஸ்வி அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய காணொளி வைரலாகியுள்ளது.
Sameer Rizvi has announced his arrival at the #TATAIPL
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
Two confident strokes with maximum result
Head to @JioCinema & @StarSportsIndia to watch the match LIVE #CSKvGT pic.twitter.com/fKnWHV3Ltz
மேலும் இன்று நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 51 ரன்களையும், அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 46 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now