ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இதில் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்களைச் சேர்க்க, அடுத்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங் 25 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்களையும், சாம் கரண் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களையும் சேர்க்க, இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஷாங் சிங் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.
Trending
ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி தற்போது இலக்கை துரத்தி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
Virat Kohli - 173 Catches
— CRICKETNMORE (@cricketnmore) March 25, 2024
Suresh Raina - 172 Catches
Rohit Sharma - 167 Catches #IPL2024 #RCBvPBKS #India #RohitSharma #SureshRaina #ViratKohli pic.twitter.com/t2ekqEAt70
அதன்படி இப்போட்டியில் இரண்டு கேட்சுகளை எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 172 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 174 கேட்சுகளைப் பிடித்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now