
ஐபிஎல் தொடரின் 18ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமின்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனானது இதுவரை சிறப்பானதாக அமையவில்லை.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணி தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு தற்போது நற்செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியுள்ளது.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டர்களை அச்சுறுத்தி வரும் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது ஐபிஎல் தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நாளைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் பும்ரா இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளனர்.