Advertisement

ஐபிஎல் 2025: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகல்; முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது டெல்லி!

தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியா ஜேக் ஃபிரேசர் மெக்குர்கிற்கு பதிலாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகல்; முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது டெல்லி!
ஐபிஎல் 2025: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகல்; முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது டெல்லி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2025 • 07:36 PM

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 14, 2025 • 07:36 PM

மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களில் சிலர் சர்வதேச போட்டிகளின் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற வீரர்களைப் பொறுத்தவரையில் ஒருசிலரை தவிர்த்து மற்றவர்கள் பாதுக்காப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜேக் ஃபிரேசார் மெக்குர்க் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

முன்னதாக காடந்த 2022, 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் முஷ்தஃபிசூர் ரஹ்மான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிவுள்ளார். இதுதவிர்த்து அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக மொத்தமாக 57 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், முஷ்தஃபிசூர் ரஹ்மான், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement