
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ச் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி, “இந்த மைதானத்தில் டாஸ் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். அதாவது, இது 280, 250 விக்கெட் என்று நாங்கள் விவாதித்தோம். ஆனால் இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது.
எனவே இங்கு வெற்றிக்கான ஸ்கோர் எது என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவது கடினம் என்பது தெளிவாகிறது. நீங்கள் இங்கு தொடக்கத்திலேயே பவர் பிளேவை பயன்படுத்த அதிகம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களால் அதைச் செய்ய முடியவில்லை, மேலும் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். மேலும் பிட்ச் நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதை உணர்ந்தோம்.