
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேகேஆர் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியாது தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூவர் அறிவிப்பு வெளியாகவில்லை.