
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலிலும் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் தோல்வியையே தழுவாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ர ஆர்ச்சர் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆர்ச்சர், “நான் வீரர்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க முடிந்தால், மறுமுனையில் இருந்து வரும் பந்து வீச்சாளர் அதையே செய்வார்கள். மேலும் அவர்கள் பேட்டர்கள் மீது அழுத்தத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். உண்மையைச் சொன்னால், பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது இவ்வளவு பெரிய பலனைத் தரும் என்று நான் நிசசயமாக எதிர்பார்க்கவில்லை.