Advertisement

ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்!

கேஏல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளது தங்கள் அணியை வலுப்படுத்தும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸின் இளம் ஆல் ரவுண்டர் விப்ராஜ் நிகாம் கூறியுள்ளார்.

Advertisement
ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்!
ராகுலின் வருகை எங்களை வலுப்படுத்தும் - விப்ராஜ் நிகாம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 29, 2025 • 10:55 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 29, 2025 • 10:55 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட ராகுல் தற்சமயம் மீண்டும் அணியில் இணைந்துள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேஏல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளது தங்கள் அணியை வலுப்படுத்தும் என்று இளம் ஆல் ரவுண்டர் விப்ராஜ் நிகாம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டிக்கு முன்னதாக கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார். அவரால் எங்கள் அணி நிறைய சமநிலையைக் கொண்டிருக்கும். மேலும் எங்கள் அணியில் உள்ள அனைவரும் சிறந்த வீரர்கள் என்பதால் ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை மதிப்பிட முடியாது.

ஏனெனில் இங்குள்ள அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள், எனவே இது ஒரு நல்ல போட்டி இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் உங்கள் முதல் போட்டியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், உங்கள் அணிக்காக ஆட்டத்தை முடித்து, அவர்களை வெற்றி பெறச் செய்தால், நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அந்தவகையில் எதிர்காலத்திலும் எனது அணிக்காக நான் அதே விஷயங்களைச் செய்வேன் என்றும் நம்புகிறேன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு சிறந்த அணி. அவர்களின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவானது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் பயிர்சி அமர்வுகள் மற்றும் பந்துவீச்சு திட்டங்களை நாங்கள் பின்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். முன்ந்தாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய விப்ராஜ் நிகம் 15 பந்துகளில் 39 ரன்களைக் குவித்து கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement