
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். இருப்பினும் இந்த வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அவரை கேகேஆர் அணி நிர்வாகம் விடுவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதையடுடுத்து ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையுடன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுக்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது அவரை ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் தடுமாறி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தங்களுடையை முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.