ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.
Trending
மேற்கொண்டு இந்த ஏலத்திற்கு முன்னதாக எந்தெந்த வீரர்கள் தங்களது அணியால் தக்கவைக்கப்படுவார்கள் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளன. மேற்கொண்டு இந்த முறை தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்க கோரி ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் விரும்பம் தெரிவித்துள்ளன. ஆனால் ஐபிஎல் அணிகளின் ரிடென்ஷன் விதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது. இதுகுறித்து அந்த அணி நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வந்தார்.
TER is JAB!
— Punjab Kings (@PunjabKingsIPL) September 18, 2024
Official Statement
Ricky Ponting joins Punjab Kings as the new Head Coach! #RickyPonting #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/DS9iAHDAu7
ஆனால் அவரது பயிற்சியின் கீழ் அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதளவில் இல்லாத காரணத்தால் சமீபத்தில் தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் ரிக்கி பாண்டிங்கை அணியில் இருந்து நீக்கியது. இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தற்போது அவர பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அந்த அணி பாண்டிங்கின் பயிற்சியின் கீழ் முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய அணிக்காக 1995ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை விளையாடிய ரிக்கி பாண்டிங் 168 டெஸ்டில் 13,378 ரன்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ரன்களையும், 17 டி20 போட்டிகளில் 401 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரின் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 91 ரன்களை எடுத்துள்ளார். இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணியானது அடுத்தடுத்து மூன்று ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now