
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை வழக்கம் போல் அதிரடியாக தொடங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் விக்கெட்டாஇ இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங்கும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் பந்துவீச வந்த ஜோஷ் ஜேசில்வுட், சுயாஷ் சர்மா இருவரும் பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங்கை மொத்தாமாக சுருட்டினர். அதன்படி அணியின் அதிரடி வீரர்கள் ஜோஷ் இங்கிலிஸ் 4 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுக்கும் என ஹேசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருமுனையில் அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்த நிலையில், மறுபக்கம் நெஹால் வதேரா, ஷஷாங்க் சிங், இம்பேக்ட் வீரர் முஷீர் கான் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.