
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் பில் சால்டிற்கு பதிலாக ஜேக்கப் பெத்தெல் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபக்கம் டெல்லி அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் மீண்டும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் அபிஷேக் போரால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் போரால் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தார்.
அதன்பின் தொடர்ந்த அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் போரால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கருண் நாரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபாஃப் டூ பிளெசிஸும் 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இதில் அக்ஸர் படேல் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.