ஸ்லோ ஓவர் ரேட்: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு அபராதம்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஷுப்மன் கில்லிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அக்ஸர் படேல் 39 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 37 ரன்களையும், கருண் நாயர் 31 ரன்களையும் சேர்த்து அசத்தினர். குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read
பின்னர் இலக்கை நோக்கி விலையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 7, சாய் சுதர்ஷன் 36, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 43 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 97 ரன்களையும், ராகுல் திவேத்தியா 11 ரன்களையும் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கிலிற்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபாராதம் விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதத்தைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, நடப்பு ஐபிஎல் இதே குற்றத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்ஸர் படேல், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சன் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ரிஷப் பந்த் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now