Advertisement

ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement
ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 13, 2025 • 06:57 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 13, 2025 • 06:57 PM

ஜெய்ப்பூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 49 ரன்களைச்  சேர்த்திருந்த நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ரியான் பராக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். மறுபக்கம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். இதில் இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் துருவ் ஜூரெல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஷிம்ரான் ஹெட்மையர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர், குர்னால், ஹேசில்வுட், தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த விராட் கோலியும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். வருடன் தேவ்தத் படிக்கலும் பார்ட்னர்ஷிப் அமைக்க அணியின் வெற்றியும் உறுதியானது. மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement