
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ. 26.75 கோடிக்கு அவரை வாங்கியதுடன், அணியின் கேப்டனகாவும் நியமித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நாடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தங்கள் அணி வீரர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸின் பயிற்சியாளர் பிராட் ஹைடன் தெரிவித்துள்ளார்.