
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கிவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 63அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேல், “இது எங்களுக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருக்கிறது. ஏனெனில் இப்போட்டியில் தோற்றால், நாங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிடுவோம். இந்த தொடரில் நாங்கள் சில தவறுகள் செய்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் எங்களால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.