Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் குறித்த கேள்விக்கு ரோஹித்தின் காட்டமான பதில்!

ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ரசிகர்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காட்டமான பதிலை கூறியுள்ளார்.

Advertisement
IPL auction is done, time for everyone to focus on colour 'blue': Rohit Sharma
IPL auction is done, time for everyone to focus on colour 'blue': Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 15, 2022 • 04:43 PM

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் தாக்கம் இன்னும் ரசிகர்களை விட்டு போகவில்லை. பல்வேறு முன்னணி வீரர்களும் வேறு அணிகளுக்கு மாறியதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 15, 2022 • 04:43 PM

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த குயிண்டன் டிக்காக், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சஹார் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வேறு அணிகள் ஏலம் எடுத்துவிட்டன. மும்பை அணி இனி புதுவித வீரர்கள் மற்றும் புதிய வியூகத்துடன் களமிறங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுவதற்கு இன்று வாய்ப்பு ஏற்பட்டது.

Trending

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குவதால் அதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இறுதியில் அவரிடம் மெகா ஏலம் குறித்து கேட்கப்பட்டது. சட்டென கோபமடைந்த ரோஹித், ஐபிஎல் தொடர் குறித்து எனக்கு விருப்பமே இல்லை. அதுப்பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.

வருடத்தில் வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஐபிஎல் தொடர் நடக்கிறது. ஆனால் அடுத்த 10 மாதங்களில் இந்திய அணிக்காக மட்டுமே விளையாடுகிறோம். எனவே இந்திய அணிக்காக என்ன செய்கிறோம், எப்படி விளையாடுகிறோம் என்பதே எனக்கு முக்கியம். நேற்று இந்திய வீரர்களுக்கும் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி கண்டிப்புடன் இதையே தான் கூறினேன் என கேப்டன் ரோஹித் சர்மா தடாலடியாக கூறியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement