இலங்கை - அயர்லாந்து டெஸ்ட் தொடர் ஏப்.16-ல் தொடக்கம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஏப்ரல் 16ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து அணி இன்று இலங்கை வந்தடைந்தது. முன்னதாக வங்கதேச அண்யுடனாக கிரிக்கெட் தொடரை முடித்த அயர்லாந்து அணி தற்போது இலங்கையுடன் டெஸ்ட் போட்டிகள் மட்டும் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
Trending
இத்தொடருக்கான அயர்லாந்து அணியையும் ஆண்டி பால்பிர்னி வழிநடத்துகிறார். அதுமட்டுமின்றி வங்கதேச டெஸ்ட் தொடரில் அசத்திய லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கிரஹாம் ஹூம், ஆண்ட்ரூ மெக்பிரைன், கர்டிஸ் காம்பேர், மார்க் அதிர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே வங்கதேச அணியுடன் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இத்தொடரிலும் அந்த அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணி விவரம்
இலங்கை (முதல் டெஸ்ட் மட்டும்): திமுத் கருணாரத்னே (கே), குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்கா, சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய, துஷான் ஹேமந்த , லசித் எம்புல்தெனிய, அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்க
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), மார்க் அதிர், கர்டிஸ் கேம்பர், முர்ரே கமின்ஸ், ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், கிரஹாம் ஹூம், மேத்யூ ஹம்ப்ரேஸ், டாம் மேயஸ், ஆண்ட்ரூ மெக்பிரைன், ஜேம்ஸ் மெக்கலம், பால் ஸ்டிர்லிங் (2வது டெஸ்டுக்கு மட்டும்), பிஜே மோர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட்.
Win Big, Make Your Cricket Tales Now