சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறிதது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்து வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது தொடங்கவுள்ளது. பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வைத்தே முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமாக, பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு இறுதி அணியை அறிவிக்க இந்த மாதம் 28ஆம் தேதி வரை நாள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்குள் நாம் நம்முடைய அணியை இறுதி செய்து கொடுத்தாக வேண்டும். அதன்படி உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இருவரும் சிறிய காயங்களினால் இருக்கிறார்கள்.
Trending
ஸ்ரேயாஸ் ஆசியக் கோப்பையின் முதல் போட்டி தவிர மற்ற எந்த போட்டியிலும் காயத்தின் காரணமாக விளையாடவில்லை. அக்சர் படேல் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. இந்த இரண்டு வீரர்கள் காயத்தால் இருக்க, உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ்வுடைய ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் செயல்பாடு மீண்டும் மோசமாகவே இருந்து வருகிறது.
இதன் காரணமாக உலகக்கோப்பை அணிக்கு அழைக்கப்பட ஒரு வாய்ப்பாக, அதற்கு முன்பாக இந்தியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பலரும் கருதி இருந்தனர். இந்த நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா “சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள். அணியில் இருந்து விளையாட ஆட்டம் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் மொத்த அணியிலேயே இடமில்லை என்பது இதயத்தை உடைப்பதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
அதெபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பாதான் இது குறித்து கூறும் பொழுது, “நான் இப்போது சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்தால் நிச்சயம் பெரிய ஏமாற்றத்தை அடைவேன்” என்று கூறியிருக்கிறார். இந்த உலகக் கோப்பைத் தொடர் முடிந்து இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.
Win Big, Make Your Cricket Tales Now