
இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் இந்திய அணிக்காக இதுவரை 6 டெஸ்ட், 17 டி20 போட்டிகளில் விளையாடி 1100 ரன்களைச் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சதத்தையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருசதம், ஒரு இரட்டைசதம் என விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை விளாசிய ஜெய்ஸ்வால் இந்திய அணி வெற்றிபெறுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்ப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியைப் பார்பது போல் உள்ளதாக முன்னள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "நான் உற்சாகமாக இருக்கும் ஒரு வீரர் இருக்கிறார், அது யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இப்போது அவர் ஐபிஎல்லில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். அவர் ஒரு அற்புதமான வீரர். அவருக்கு சௌரவ் கங்குலியைப் போல் ஆஃப்-சைடில் விளையாடும் திறன் உள்ளது. ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்பதற்கும் அப்படியே சௌரவ் கங்குலியை பார்ப்பது போல் உள்ளது.