
ENG vs IND Test Series: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜூலை 10) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருப்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளான. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனலில் ஒரு காணொளியை பதிவேற்றியுள்ளார், அதில் அவர் லார்ட்ஸ் டெஸ்டுக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார். அந்தவகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ராவை அணியில் சேர்த்துள்ளார். மேற்கொண்டு அவர் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.