ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ எடுத்த நடவடிக்கை; கேள்வி எழுப்பும் இர்ஃபான் பதான்!
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானில் எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது. காரணம் இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம்பெறாம் இருந்த நிலையில் அவர்களை பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி கேட்டுக்கொண்டது.
Trending
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாகவே தற்போது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த முடிவு சர்ச்சையாக மாறிவரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இஃபான் பதான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவில், "ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் திறமையான கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.
Agree With Irfan Pathan?#INDvENG #India #TeamIndia #RanjiTrophy #IshanKishan #HardikPandya #ShreyasIyer pic.twitter.com/TZURzoadnC
— CRICKETNMORE (@cricketnmore) February 29, 2024
ஆனால் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவரும் அவரைப் போன்றவர்களும் இந்திய அணிக்காக விளையாடாத போது உள்நாட்டில் நடைபெறும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க வேண்டுமா? பிசிசிஐயின் நடவடிக்கை அனைவருக்கும் பொருந்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் தாங்கள் எதிர்பார்த்த முடிவுகளை அடையாது” என்று பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now