
ENG vs IND, 2nd Test: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி உள்ள நிலையில், அவர் விளையாடாத நிலையில் ஆகாஷ் தீப் நல்ல தேர்வாக இருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாகவே ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை காரணமாக அவர் இத்தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் எந்த மூன்று போட்டிகளில் விளையாடுவார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இதனால் அவர் நாளை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தற்போது வரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் அவரது இடத்திற்கு ஆகாஷ் தீப் நல்ல தேர்வாக இருப்பார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.