Advertisement

IND vs AUS: நான்காவது டெஸ்டிற்கான இந்திய அணியில் இஷான் கிஷான்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் வீரரான இஷன் கிஷனிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 07, 2023 • 22:51 PM
Ishan Kishan Is Likely  To Replace KS Bharat In The Fourth Test!
Ishan Kishan Is Likely To Replace KS Bharat In The Fourth Test! (Image Source: Google)
Advertisement

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில், ஆஸ்திரேலியாவை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடர் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் 8ம் தேதி துவங்க உள்ளது. கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, அடுத்த போட்டிக்கான ஆடும் லெவனில் இஷான் கிஷனிற்கு இடம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending


ரிஷப் பந்த் இல்லாததால் கடந்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எஸ் பாரத், விக்கெட் கீப்பிங்கில் குறை சொல்ல முடியாத அளவு செயல்பட்டாலும், பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில், அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கே.எஸ் பாரத்திற்கு பதிலாக இஷான் கிஷன் அறிமுக வீரராக சேர்க்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, முகமது ஷமிக்கு மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கவும் இந்திய அணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement