IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் அறிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தோடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மீண்டும் வெற்றியை ஈட்டுவதற்காக இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அணிகெதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாலர் ஜேக் லீச் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Trending
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜேக் லீச் விளையாடிய நிலையில், அப்போட்டியில் காயமடைந்தார். இதையடுத்து அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சோயப் பஷீர் அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளில் ஜேக் லீச் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்தே விலகியுள்ளார்.
Big Blow To England's Chances In The Series!#INDvENG #India #TeamIndia #England #JackLeach pic.twitter.com/1Xchm9QwUp
— CRICKETNMORE (@cricketnmore) February 11, 2024
இதனால் இங்கிலாந்து அணி சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் டாம் ஹார்ட்லி, சோயப் பஷீ, ரெஹான் அஹ்மத் ஆகியோருடன் ஜோ ரூட்டும் சிறப்பாக பந்துவீசி வருவதால் இங்கிலாந்து அணி பின்னடைவை சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜேக் லீச்சிற்கான மாற்று வீரரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now