
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுது களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை குவித்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இதனால் இப்போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரச்சிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில் இச்சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி நேற்றைய ஆட்டத்தில் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தியிருந்த. அதன்பின் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் குல்தீப் யாதவின் விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் பிரம்மாண்ட சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.