
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வீழ்த்தி சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது.
இந்த தொடரில் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஆரம்ப காலங்களில் சாதாரண பவுலராகவே வலம் வந்த அவர் நாள்கள் செல்ல செல்ல பழைய சரக்கை போல அனுபவத்தால் முன்னேற்றத்தைக் கண்டு சமீபத்திய வருடங்களில் இரு மடங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் இதுவரை 690 விக்கெட்களை எடுத்துள்ள அவர் உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். இருப்பினும் அந்த சாதனையை படைத்து 41 வயது கடந்தும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.