சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். இங்கிலாந்து அணிக்காக 2002ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 41 வயதைக் கடந்தும் மிக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அந்தவகையில் தற்போதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுநாள்வரை 187 டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். இதில் 32 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்காக 194 போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Trending
சமீபத்தில் கூட இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்று, விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் 42 வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் எப்போது ஓய்வுபெறுவார் என்ற கேள்விகள் அடிக்கடி எழுப்பட்டு வந்தன. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தாண்டு இறுதியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இங்கிலாந்தின் கோடைக்கால கிரிக்கெட் சீசனுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இங்கிலாந்து டெஸ்ட் அணி பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னரே ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
The GOAT is set to retire! pic.twitter.com/7a8UkR4UCu
— CRICKETNMORE (@cricketnmore) May 10, 2024
இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மிகப்பெரிய வகையில் பிரியா விடைகொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் கிட்டத்திட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது வேகப்பந்துவீச்சாலும், ஸ்விங் திறமையாலும் பல்வேறு ஜாம்பவான்களை நிலைகுழைய செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்ற செய்து அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now