லார்ட்ஸ் மைதானத்தில் தான் எனது கடைசி போட்டி - ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். இங்கிலாந்து அணிக்காக 2002ஆம் ஆண்டு அறிமுகமான இவர், 41 வயதைக் கடந்தும் மிக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அந்தவகையில் தற்போதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுநாள்வரை 187 டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் எனும் சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். இதில் 32 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்காக 194 போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Trending
தற்சமயம் 42 வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் எப்போது ஓய்வுபெறுவார் என்ற கேள்விகள் அடிக்கடி எழுப்பட்டு வந்தன. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தாண்டு இறுதியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இங்கிலாந்தின் கோடைக்கால கிரிக்கெட் சீசனுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகினர்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
Jimmy Anderson to retire from Test cricket after the first Test at Lord's against The West Indies! pic.twitter.com/lhigCs9BBO
— CRICKETNMORE (@cricketnmore) May 11, 2024
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்த கோடைக்காலத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் இருந்து நான் விரும்பிய விளையாட்டை விளையாடியதுடன், 20 ஆண்டுகளுகளுக்கு மேல் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியது நம்ப முடியாத ஒன்றாகும். ஆனால் தற்போது இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன்.
#JamesAnderson #England #Cricket #TestCricket pic.twitter.com/JVek3ZYliQ
— CRICKETNMORE (@cricketnmore) May 11, 2024
இருப்பினும் நன் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும்” என்று தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கிட்டத்திட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தனது வேகப்பந்துவீச்சாலும், ஸ்விங் திறமையாலும் பல்வேறு ஜாம்பவான்களை நிலைகுழைய செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now