இங்கிலாந்து லையன்ஸ் அணி அறிவிப்பு; கேப்டனாக ஜேம்ஸ் ரீவ் நியமனம்!
இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இங்கிலாந்து லையன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்த அணியில் துணைக்கேப்டனாக துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட், ஷர்தூல் தாக்கூர், இஷான் கிஷனுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் ரெட்டி, ஆகாஷ் தீப், சர்ஃப்ராஸ் கான், ஹர்ஷித் ரானா மற்றும் தனுஷ் கோட்டியானும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து லையன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாள கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்துள்ளார். முன்னதாக காயம் காரணமாக ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் அவர் இங்கிலாந்து லையன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர்த்து ரெஹான் அஹ்மத், அவரது சகோதரர் ஃபர்ஹான் அஹ்மத், ஜோர்டன் காக்ஸ் மற்றும் டேன் மௌஸ்லி உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரெஹான் அஹ்மத் முதல் போட்டியிலும், ஜோர்டன் காக்ஸ் இரண்டு போட்டியிலும் மட்டுமே விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து லையன்ஸ்: ஜேம்ஸ் ரெவ் (கேப்டன்), ஃபர்ஹான் அகமது, ரெஹான் அகமது, சோனி பேக்கர், ஜோர்டான் காக்ஸ், ராக்கி பிளின்டாஃப், எமிலியோ கே, டாம் ஹைன்ஸ், ஜார்ஜ் ஹில், ஜோஷ் ஹல், எடி ஜாக், பென் மெக்கின்னி, டான் மௌஸ்லி, அஜீத் சிங் டேல், கிறிஸ் வோக்ஸ்.
Also Read: LIVE Cricket Score
இந்திய ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
Win Big, Make Your Cricket Tales Now