
Jamie Overton Indefinite Break Red-Ball Cricket: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன், டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஜேமி ஓவர்டன். இவர் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில், 2 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார்.
இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்த அவர், டெஸ்ட் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து காலவரையின்றி விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2025-26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.