
Jamie Smith Complete 1000 Test Runs: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களைப் பூர்த்தி செய்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
மேற்கொண்டு பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், முகனது சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.