
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிங்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பர்மிங்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியாது தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் இப்போட்டியானது 30 பந்துகளைக் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியில் மேத்யூஸ் ஹர்ஸ்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த பில் சால்ட் - மேக்ஸ் ஹோல்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பில் சால்ட் 12 ரன்கள்லும், மேக்ஸ் ஹோல்டன் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டியதால், 30 பந்துகள் முடிவில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் ஃபினிக்ஸ் தரப்பில் ஆடம் மில்னே 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ, சீன் அபோட், கிறிஸ் வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பர்மிங்ஹாம் அணிக்கு ஜேமிஸ் ஸ்மித் - பென் டக்கெட் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.