
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி தங்களுடையா முதல் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது.
மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிக்காக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக ஜேமி ஸ்மித் களமிறங்குவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.