
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக, ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, இலங்கைக்கு எதிரான தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார். இதையடுத்து நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா அடுத்து ஆசிய கோப்பை மற்றும் முக்கியமான தொடரான ஒரு நாள் கிரிக்கெட் உலக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு செல்கிறது. அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணை வெளியானது. ஆனால், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. இந்த அயர்லாந்து தொடர் மூலமாக ஜஸ்ப்ரித் பும்ரா அணிக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டது. அதனை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் அண்மையில் உறுதி செய்தார்.